சுய பரிசோதனை

சுய பரிசோதனை
ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

நுழைந்திடுவோம் இஸ்லாத்தில் நாம் முழுமையாக..
ஈமானை வளர்த்திடுவோம் நம்மனதில் செழுமையாக..

ஷைத்தானிய செயல்கள் என்பது வழிகேடு..
அவ்வழி தொடர்ந்தால் நமக்கு பெரும்கேடு..

பெயர்தாங்கி முஸ்லிம்களாக வாழவேண்டாம்..
நயவஞ்சகர் கூட்டத்தில் நாம் சேரவேண்டாம்..

வான்மறையும் நபிமொழியும் செவியேற்ப்போம்..
நாளும் நன்மக்களாய் நாம் வாழ்ந்திடுவோம்..

சன்மார்க்க வழிபேணி எந்நாளும் நடந்திடுவோம்..
நன்மை ஏவி தீமையை நாம் தடுத்திடுவோம்..

மார்க்கம் அனுமதித்ததை நாம் அமல் செய்வோம்..
விலக்கியவற்றிலிருந்து நாம் விலகிக் கொள்வோம்..

நாம் செய்யாததை பிறருக்கு சொல்ல வேண்டாம்..
அல்லாஹ்வின் வெறுப்பிலே நாம் வீழவேண்டாம்..

மார்க்கத்தை நம் வாழ்வு முழுதும் பிரதிபலிப்போம்..
மாறா ஈமானோடு என்றும் நாம் வாழ்ந்திடுவோம்..

அளவிடுவோம் நம் செயல்களை மார்க்க நெறிகளோடு..
அழகாக்கிடுவோம் நம் வாழ்வை மரண சிந்தனையோடு..

செய்து கொள்வோம் நம் செயல்களுக்கு சுயபரிசோதனை..
ஈருலக வெற்றிதான் நமக்கு பெரும் சாதனை..

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *