உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்..

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..
படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்..

குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..

எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்..
போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்..

தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்..
உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..

தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்..
ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..

மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே..
தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே..

தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே..
மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே..

தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே..
இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..

இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..
நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..

தொழுகையை விடுவது இணைவைப்போரில் ஒருவராய் நமை ஆக்கிவிடும்..
ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்துவிடும்..

தொழுகையை விடுவோர் இறைநிராகரிப்பாளாராக ஆகிவிடுவர்..
மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப்படுவர்..

தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எண்ணாதீர்..
அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..

தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திடுங்கள்..
மனம்வருந்தி ஏகஇறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..

தொழுகை இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகும்..
அல்லாஹ்விற்கு இது மிக விருப்பமான செயலாகும்..

வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்..
மார்க்க கடமையினைப் பேணி நடந்திடுவோம்..

நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழுதிடுவோம்..
ஸகர் நரகத்திலிருந்து நம்மை காத்திடுவோம்..

10 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *