உரைகல்!

உரைகல்!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

பெற்றோருக்கு புதல்வியாய்..
மணாளனுக்கு மனைவியாய்..
சேய்களுக்கு தாயாய்..
மாமியாருக்கு பொற்குடமாய்..
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?

கணவனுக்கு ஆடையாய்..
கட்டிலில் காதலியாய்..
இல்லத்து அரசியாய்..
ஆலோசனை வழங்கும் அமைச்சராய்..
ஆறுதல் அளிக்கும் தோழியாய்..
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?

தன் சொந்தங்கள் பிரிந்து..
என் சொந்தங்கள் ஏற்று..
புது பந்தங்கள் பூத்துக்குழுங்க..
புத்துயிர் அளித்தவளே!
எத்தனை பரிமாணங்கள் உனக்கு?

கண்களால் கைது செய்து..
உறவாக இணைந்து..
உயிரோடு கலந்து..
உள்ளத்தில் சிறை வைத்து..
நிழலாக தொடர்ந்து..
நிஜமாக வாழ்பவளே!
எத்தனை பரிமாணங்கள் எடுத்திடினும்..
அனைத்திலும் எனைக் கவர்ந்தவளே!

பெருமானாரின் பொன்மொழிகளில் ஒன்று..
மக்களில் சிறந்தவர்..
தன் மனைவியிடத்தில் சிறந்தவரே!

உன்னில் சிறந்தவனா நான்??
என் குணத்தை உரசிப் பார்க்கும் உரைகல்லாய்..
பண்பை பறைசாற்றும் படிக்கல்லாய்..
நாணயத்தை எடைபோடும் எடைக்கல்லாய்..
இன்னும் எத்தனை பரிமாணங்கள் தான் உனக்கு?

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *