வரதட்சணை! (நவீன யாசகம்)

வரதட்சணை! (நவீன யாசகம்)

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

வரதட்சணை எனும் நவீன யாசகம்..
சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..

கன்னியரை மணமுடிக்க..
காளையர்கள் கேட்கும் யாசகம்…

தன் இயலாமையை சொல்லி யாசிப்பவன் யாசகன்..
தன் பெருமையைச் சொல்லி யாசிப்பவனோ மணமகன்..

பெண்ணின் முதுகெலும்பாக இருக்கவேண்டியவன் நீ..
பெண்ணிடமே முதுகெலும்பில்லாமல் யாசிக்கிறாய் நீ..

உன்னால் உருவாகுமே சமுதாயத்தில் முதிர்கன்னிகள்..
உதிக்குமோ அவர்களின் வாழ்க்கையில் விடிவெள்ளிகள்..

கால்நடையை தான் விலை பேசுவர் சந்தையிலே..
மனிதனையும் விலை பேசுகின்றனரே மணச்சந்தையிலே..

ஓரிரவு சேர்ந்து வாழ விலை கேட்பவள்.. விலைமகள்..
வாழ்க்கை முழுதும் சேர்ந்து வாழ..
விலை கேட்கும் நீ.. விலைமகனா??

மணமகளுக்கு மணக்கொடையினை..
மனமுவந்து அளித்திடுங்கள்.. எனும்..
மார்க்கம் காட்டிய வழி இருக்கு..
வேண்டாம் இந்த வரதட்சணை நமக்கு..

ஆறறிவு பெற்ற மக்களா?? இல்லை..
ஐந்தறிவு கொண்ட மாக்களா???
சிந்தையில் இறைவேதம் நுழையாதோ..?
சிந்தனையில் தெளிவு பிறக்காதோ??

இருமனங்கள் இணைவது தான் ஆனந்தம்..
திருமணத்தில் கூடாது வணிக பேரம்..

சிந்தனையை சீரமைத்து யோசியுங்கள்..
சிரம் தாழ்த்தி இறைவனிடம் மட்டுமே யாசியுங்கள்..

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *