பலதார மணம்!

பலதார மணம்!

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்

இறைவன் அருளிய வாய்ப்பு இது உபரியாக..
பயன்படுத்த வேண்டும் இதை மிகச் சரியாக..

நீதமாக நடத்திட வேண்டும் இம்மையிலே..
இல்லையெனில்.. கைசேதப்படுவோமே மறுமையிலே..

ஒருவனுக்கு ஒருத்தி எனும் பெருமுழக்கம்..
எக்காலமும் ஒவ்வாத வீண்விளக்கம்..

நாளுக்கு நாள் பெருகிவருது பெண்கள் விகிதம்..
எவ்வாறு முழுமைபெறும் பெண்கள் வாழ்வு நூறுசதம்?

விதவை மணம் பேசிடுவர் வாய்கிழிய..
செயல்படுத்த முடியாமல் சென்றிடுவர் ஓடிஒளிய..

விதவைக்கும் வாழ்வு அளிக்க ஒரு திட்டம்..
அதுவே இறைவன் அருளிய பலதார மணச்சட்டம்..

விலைமாதர் நாடி ஆடவர்தாம்; சென்றிடாமல்..
தடுத்து ஒழுக்கம் பேணிடவே இச்சட்டம்..

உரிமையின்றி இரகசியமாய் வாழும் பெண்களுக்கும்..
உரிமை அனைத்தும் கிடைக்கச் செய்யும் இறைச்சட்டம்..

பரவிவருது ஓரினச் சேர்க்கை எனும் கெட்ட செய்கை..
இயற்கைக்கு முரணான வெட்க செய்கை..
இதற்கு உறுதுணையாய் நின்றிடுதே மனித சட்டம்..
இதை வேரோடு சாய்க்க உதவிடுதே மார்க்க சட்டம்..

எக்காளம் பேசும் மூடர் இதை அறிவாரோ..??
எப்போது அறிவு பெற்று தெளிவாரோ..??

தேவையுடையோர் செய்து கொள்க இருமணமே..
தேவையற்றோர் திருப்தி கொள்க ஒன்றுடனே..

மார்க்கம் விதித்த வரம்புகள் இவை யாவும்..
பேணி நாமும் நடந்திடுவோமே எந்நாளும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *