மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் ஷைக் அப்துல் ரஹ்மான அல் ஸுதைஸ் அவர்கள், தன்னுடைய வெள்ளிக்கிழமை குத்பாவில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து செயலாற்றுமாறு தலைவர்களையும், உலக இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொண்டார்கள். மோதல் போக்கு மற்றும் குழப்பங்களை விட்டுவிட்டு உண்மையான ஒற்றுமையின் பக்கம் செல்வதுதான் நம்முன்னே உள்ள சரியான வழி என்று கூறினார்கள்.
ஆட்சி அதிகாரங்கள் இழப்பு, புதிய ஆட்சிகள் உருவாகுதல், தலைவர்களின் இறப்பு என்று காலமும் நிகழ்வுகளும் நம்மை விட்டு சுழன்று கொண்டிருக்கும் வேலையில், மறுமை வாழ்வுக்காக கடினமாக உழைக்குமாறு ஹஜ்ஜூக்குப்பிறகு நடைபெற்ற முதல் குத்பாவில் உரை நிகழ்த்தினார்கள். ஹஜ் கிரியைகள் முடிந்தபிறகும், ஹரம் பள்ளிவாசலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும் மக்களால் நிரம்பி வழிந்தது.
வீரியம் மிகுந்த தனித்தன்மை வாய்ந்த சமுதாயத்தின் தனிப்பட்ட இலக்கான சிறப்புமிக்க சமுதாயத்தை, வருடாந்திர யாத்திரையான ஹஜ்ஜானது நம்மிடையே மலரச்செய்கிறது. மேலும் பொறுமை, விட்டுக்கொடுத்தல், பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்டுதல் போன்றவற்றை இந்த ஹஜ்ஜின் மூலம் நாம கற்றுக்கொள்ளும் பாடமாகும். மேலும் ஹஜ்ஜானது ஒன்றுபட்ட வீரத்தை இந்த புனித பூமியில் கூடியிருக்கும் புனிதமான மக்களிடையே ஊற்றுவிக்கிறது.
சமூகத்தின் கருத்து வேறுபாடுகள் ஒற்றுமையின்மைக்குத்தான் வழிவகுக்கும் என்று கூறினார். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜானது ஒருவரை இறையருள் சார்ந்த சந்தோஷத்திற்கு உயர்த்துகிறது. அதே சமயத்தில் அவர் கருத்து வேறுபாடுகள் மற்றும் பாவமான காரியங்களில் இருந்தும் விலகி நேரான பாதையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த உலகத்தின் அறைகூவல்களை எதிர்நோக்குவதற்கு, உறுதியான நம்பிக்கை, பொறுமை மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சீரிய வாழ்க்கை நெறிகள் ஆகியவற்றை போர்க்கவசமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள.
இறைவனுக்காக முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்வது மட்டுமே ஒருவர் தன்னை பாவத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாகும்.
நாட்டின் மன்னருக்கும், பாதுகாப்பான மற்றும் செளகரியமான ஹஜ்ஜூக்காக, இரவு பகல் அயராது உழைத்தவர்களுக்கும், ஹஜ்ஜின் அமைப்பாளர்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்திக்குமாறும் தன்னுடைய உரையின் கடைசியில் வேண்டிக் கொண்டார்கள்.
வல்லவனாம் அல்லாஹ்வின் பெயரால்.
சத்திய வாழ்க்கை நெறி மூலம் வையத்தை வாழ்விக்க,உயவிக்க
உங்கள் பங்கும் மீஸானில் கணமாய் இறுக்க வாழ்த்துக்கள்!
intha bani todarattum