Print This Post Print This Post Email This Post Email This Post

அனுமதி இல்லாத ஹஜ் சட்டவிரோதமா​னது – சவுதி அரேபியாவின் தலைமை முஃப்தி!

hajj1

சவுதி அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் சவுதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஹஜ் செயவதை தடுப்பதற்காக மீடியாக்களில் சவுதி அரசாங்கம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.

சவுதி அரேபியாவின் தலைமை முஃப்தி ஷைக் அப்துல் அஜீஸ் அவர்கள், முன் அனுமதி பெறாமல் ஹஜ் செய்வது சட்ட விரோதமானது என்று ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அவர் கூறுகையில், அனுமதி இல்லாமல் ஹஜ் செய்பவர்களுக்காக மக்காவில் நுழைவதற்கு உதவுபவர்கள் சட்டத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக செயல்படுபவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பது இறைவனிடத்தில் ஒருவருடைய கூலியை குறைத்துவிடும் என்பதால் ஹஜ் செய்பவர்களுக்கு இடையூறாக பொது இடங்களில் குவிந்திருப்பதற்கு எதிராகவும் ஷைக் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்கு உதவுவதும், ஹாஜிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ஒரு முஸ்லிமின் கடமை என்றும் கூறினார்கள்.

அளவிற்கு அதிகமாக கூட்டம் நெரிசல் ஏற்பட்டு அதன் மூலன் ஹாஜிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை தடுப்பதற்காகவும் ஹாஜிகளுக்குத் தேவையான சேவைகளை முறையாக திட்டமிட்டு செய்வதற்கும் இத்தகைய பர்மிட் முறைகள் மிக அவசியம் என ‘வேல்ர்டு அசெம்ப்ளி ஆஃப் முஸ்லிம் யூத்’ – ன் அசிஸ்டன்ட் ஜெனரல் செகரட்டரி முஹம்மத் பதாதாஹ் இந்த பர்மிட் முறையை ஆதரித்து கூறினார்.

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் முஸ்லிம் மக்கள் தொகையில் ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு ஆயிரம் பேர்களை அந்த நாடு ஹஜ் செய்வதற்காக அனுப்பலாம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சவூதி அரேபியாவிலிருந்து ஹஜ்ஜூக்கு செல்பவர்களின் எண்ணிக்கையோ அதனுடைய கோட்டாவிற்கு மிக மிக அதிகமாக இருப்பதாகவும்  அதன் மூலம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்பவர்களுக்கு பல சிக்கல்களை இது ஏற்படுத்துவதாகவும் முஹம்மது பதாதா அவர்கள் கூறினார்கள்.

இச்செய்தியை அரப் நியூஸ் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் முறையான அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய நாடியுள்ளவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo