Print This Post Print This Post Email This Post Email This Post

ஒருவருக்கொருவர் பகைமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது!

joinhand

அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசாதீர்கள்!’ (அல்குர்ஆன்)

 அல்லாஹ் கூறுகிறான்: ‘நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்’. (அல்குர்ஆன்)
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
”நீங்கள் சந்தேகம் கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். சந்தேகம் எண்ணம் கொள்வது, பேச்சில் மிகப்பெரும் பொய்யாகும். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் குறையை ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பெருமை கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு கட்டளையிட்டபடி நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக, சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். இவனுக்கு அவன் அநீதம் செய்ய மாட்டான். இவனை அவன் ஏமாற்ற மாட்டான். இவனை அவன் இழிவுபடுத்திடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது. இறையச்சம் இங்கே உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிக்கொண்டே தமது நெஞ்சை சுட்டிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து, ”ஒருவன் தன் சகோதர முஸ்லிமை இழிவாக எண்ணுவது தீமையாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமின் ரத்தம், அவனது கண்ணியம், அவனது சொத்து ஆகியவை (சீர்குலைக்க) தடை செய்யப்பட்டதாகும். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலையோ, உங்கள் தோற்றத்தையோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயம், உங்களின் செயல்களின் பக்கமே பார்க்கிறான்” என்றும் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது :
”நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். நீங்கள் பிறர் குறையைத் தேடி அலையாதீர்கள். நீங்கள் ஒட்டுக் கேட்காதீர்கள். பிறர் வியாபாரத்தில் தலையிட்டு விலையை உயர்த்தாதீர்கள். அல்லாஹ்வின் அடிமைகளாக சகோதரர்களாக ஆகிவிடுங்கள்.” (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1570 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo