கேலக்ஸி எஸ் க்ளைடு என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். இதுவரை எத்தனையோ தொழில் நுட்பங்களைக் கொடுத்திருக்கிறது சாம்சங் நிறுவனம். அந்த வகையில் தனது படைப்புப் பட்டியலில் கேலக்ஸி எஸ் க்ளைடு மொபைலும் சேர இருக்கிறது.
இந்த எஸ் க்ளைடு மொபைலின் வடிவமைப்பு பார்ப்பவர்களின் கண்களை எளிதாகக் கவர்ந்துவிடும். இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் சாம்சங் எக்ஸினோஸ் 4210 என்ற சிபியூ இணைக்கப்பட்டுள்ளது.
இதில் உயர்ந்த தொழில் நுட்பமான 1.2 ஜிஎச்இசட் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4 இஞ்ச் திரை வசதி கொண்டது.
மல்டி டச் ஸ்கிரீன் தொழில் நுட்பமும் உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், யூஎஸ்பி 2.0 போர்ட், புளூடூத், வைபை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நெட் வசதி, தகவல் பரிமாற்றம், கணினியில் உள்ளவற்றை மொபைலுக்கு யூஎஸ்பியின் மூலம் பரிமாற்றம் செய்தல் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த மொபைல் எச்எஸ்டிபிஏ, ஜிபிஆர்எஸ், எட்ஜ், யூஎம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Thanks: Thatstamil