தடுக்கப்பட்ட மற்றும் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகள்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூற வேண்டிய விஷயங்களை, அது எளிதில் மக்களை சென்றடைவதற்காகவும், இலகுவாக பின்பற்றுவதற்காகவும் ரத்தினச் சுருக்கமாக சொல்வார்கள். அதே சமயத்தில் அது பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். இஸ்லாமிய சட்ட திட்டங்களை சுலபமாக ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் அதை பின்பற்றுவதற்கும் ஏற்ற வகையில் விளக்கக் கூடிய சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கி இருந்தான். அதற்கு சான்றாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

“தாயை நிந்தனை செய்வதையும், அடுத்தவரின் உரிமைகளை மறுப்பதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் இறைவன் தடை செய்துள்ளான்.  வீண் பேச்சுக்கள் பேசுவோரையும், அதிகமான கேள்விகள் கேட்போரையும், வீண் செலவுகள் செய்வோரையும் இறைவன் விரும்புவதில்லை என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிக்கிறார்கள் (புஹாரி)

இங்கே நபியவர்கள் மூன்று தடுக்கப்பட்ட மற்றும் மூன்று தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாதது,  இஸ்லாத்தைப் பொறுத்தவரை இறைவனுக்கு இணைவைப்பதறகு அடுத்த இடத்தில் உள்ள பாவமாகும். பொதுவாக பெண்கள் பலவீனமாக இருப்பதால் குழந்தைகள் அவரை இலகுவாக நிந்தனைக்கு உள்ளாக்க முடியும் என்பதால், இங்கே தாய் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.  ஆகையால் தாயுடனான உறவில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பெண் குழந்தைகள் பொருளாதார அளவில் சுமையை ஏற்படுத்துவதாலும், சமூகத்துக்கு அவமானத்தை கொண்டு வருவதாலும், பெண் குழந்தை பிறப்பை அபச குணமாக கருதி அதை உயிருடனே புதைக்கும் வழக்கத்தை மடமைக்கால மக்கள் கடைபிடித்தார்கள். நபியவர்கள் இதை வண்மையாக கண்டித்ததுடன் இறைவனிடத்திலே தடுக்கப்பட்ட பாவமாகும் என்று கூறினார்கள்.

மேலும் அடுத்தவர்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளை மறுப்பது / தடுப்பது இறைவனிடத்திலே தடுக்கப்பட்ட பாவமாகும். இந்த விஷயத்திலே நாம் கவனமாக இருக்க வேண்டும்.

வீண் பேச்சுக்கள் பேசுவது, தேவை இல்லாத பயனற்ற கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பது மற்றும் வீண் செலவுகள் செய்வது ஆகியவைகள் இறைவனுக்கு உவப்பான செயல்கள் அல்ல என்றும்  கூறியுள்ளார்கள். ஆகையால் இவற்றை நாம் முற்றாக தவிர்ந்து கொள்ளவேண்டும்.

இறைவன் நம் அனைவரையும் மேலே கூறியவற்றில் இருந்து தவிர்ந்து கொள்ளக் கூடிய நன்மக்களில் ஒருவராக ஆக்கி அருள்வானாக.

One comment

 • mnaufar

  SALAM ALAIKKUM

  BROTHER,

  01. “””உரிமைகளை மறுப்பது / தடுப்பது இறைவனிடத்திலே தடுக்கப்பட்ட பாவமாகும்.”””
  02. .”””……ஆகையால் தாயுடனான உறவில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.”””

  இந்த ஹதீஸ் மூலம் நீங்கள் கூறியது……..

  சில தாய்மார்கள் தங்கல் பிள்ளைகளை , படிக்க விடாது தடுத்து அவர்களின் வாழ்கையை நாசம்மாக்கி இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்…
  சில தாய்மார்கள் தனது மகனுக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுக்காது மறுத்து அதை பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து அந்த மகனின் உரிமை பறித்து , வாழ்கையை கஷ்டமாக்கி நட்டார்டில் விட்ட , விடுகின்ற எத்தனையோ ஆயிரம் தாய்மார்கள் உள்ளனர்.

  இவர்களை பற்றி உங்கள் விளக்கம் என்ன ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *