Print This Post Print This Post Email This Post Email This Post

அமெரிக்க ட்ரோன் ஏவுகனைத் தாக்குதலில் 16 சோமாலியர்கள் படுகொலை!

கென்யா எல்லையை ஒட்டிய தெற்கு சோமாலியாவில் அமெரிக்க ட்ரோன் ஏவுகனைத் தாக்குதலில் 16 சோமாலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 50 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் ஜூபா பிரதேசத்திலுள்ள அஃப்மதாவ் என்னும் நகரத்திற்கு அருகில் இத்தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. 

சோமாலியா மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், லிபியா, ஈராக் மற்றும் ஏமன் போன்ற நாடுகளில் இத்தகைய ட்ரோன் ஏவுகனைத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகின்றது.

அமெரிக்காவுக்கு எதிரான போராளிகளைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகின்றது. ஆயினும் பொதுமக்களே இதில் அதிகம் கொல்லப்படுவதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo