ஃபிரன்ஸில் அதிகரித்து வரும் இறையில்லங்கள்!
ஃபிரான்ஸ் நாட்டில் 100 முதல் 150 வரையிலான புதிய பள்ளிவாயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் ஃபிரான்ஸ் நாட்டில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 1000 லிருந்து 2000 ஆயிரமாக உயர்ந்திருப்பதாக ஒரு சர்வே கூறுகின்றது.
இஸ்லாத்தைப் பின்பற்றக்கூடிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கடந்த நோன்பு காலத்தில் 71 சதவிகிதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நோன்பிருந்ததாகவும் சர்வே கூறுகின்றது. மேலும் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிகளுக்கு வருகின்ற முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பள்ளிவாயில்களில் இடப்பற்றக்குறை ஏற்படுவதாகவும் அதை சமாளிப்பதற்கு புதிய பள்ளிவாயில்கள் கட்டப்படு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.