சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்வதற்காக தமிழகத்தின் பாடவகுப்புகளின் நேரத்தை அதிகரிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 1 மற்றும் 6 ஆம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நீண்ட இழுபறிக்குப் பின்னர் 10 ஆம் வகுப்பு வரையுள்ள ஏனைய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வித்திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தை சரிசெய்யும் விதத்தில் பாடவகுப்பு நேரம் 30 நிமிடம் அதிகரிக்கப்படும் எனத்தெரிகிறது.