மனிதன் படைக்கப்பட்டது விந்திலிருந்தா? அல்லது மண்ணிலிருந்தா?

இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:

கேள்வி எண்: 30

மனிதன் விந்திலிருந்து படைக்கப்பட்டான் என்று ஒரு இடத்தில் குறிப்பிடும் குர்ஆன், மற்றொரு இடத்தில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடுகிறது. இந்த இரண்டு வசனங்களும் முரண்படுகிறது இல்லையா?. மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை அறிவியில் ரீதியாக எவ்வாறு நிரூபிப்பீர்கள்?

பதில்:

1. மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான்:

அருள்மறை குர்ஆனின் 75வது அத்தியாயம் ஸுரத்துல் கியாமாவின் 37வது வசனம் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத் துளிக்குள் அவன் இருக்கவில்லையா?.‘( அல் குர்ஆன் 75:37)?

மேலும் அருள்மறை குர்ஆனின் பல வசனங்களில் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 5வது வசனம் மனிதன் மண்ணிலிருந்தும், இந்திரியத் துளியிலிருந்தும், படைக்கப்பட்டான் என்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘…..நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத் துளியிலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்: பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்து படைத்தோம்…..’ என்று குறிப்பிடுகிறது.

மனித உடல் படைக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் யாவும் (மனித உடலின் ஆக்கக் கூறுகள்) ஒரு சிறிதளவோ அல்லது பெரும் அளவோ பூமி இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் தெரிந்து கொண்டுள்ள மேற்படி உண்மையானது, மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்கிற அருள்மறை குர்ஆனின் கூற்றுக்கு அறிவியல் தரும் விளக்கமாகும்.

அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்றும், சில வசனங்கள் மனிதன் இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டான் என்றும் கூறுகிறது. மேற்படி கூற்று முரண்பாடானது அல்ல. ஒரே நேரத்தில் நடைபெற முடியாத எதிர்மறையான இரண்டு செயல்களுக்கு முரண்பாடு என்று பெயர்.

2. மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்:

அருள்மறை குர்ஆனின் சில வசனங்கள் மனிதன் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான் என்று கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 54வது வசனம் சொல்லும் பொருளை உதாரணமாகக் கொள்ளலாம்:

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து….’(அல் குர்ஆன் 25:54).

மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்டான் என்று அருள்மறை குர்ஆன் சொன்ன மூன்று கருத்துக்களையும் நவீன அறிவியல், உண்மை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

3. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction).

உதாரணத்திற்கு, ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கப் பட வேண்டுமெனில் – அதற்கு தேவையான அளவு வெந்நீர் வேண்டும். தேவையான அளவு தேயிலைத் துகளும் வேண்டும். தேநீர் தயாரிக்க வெந்நீர் வேண்டும். அதுபோல தேநீர் தயாரிக்க தேயிலைத் துகளும் வேண்டும் என்று சொல்வதால் – மேற்படி இரண்டு கூற்றுக்களும் வெவ்வேறாக இருந்தாலும், அவைகள் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை. அத்துடன் இனிப்பான தேநீர் வேண்டுமெனில், சர்க்கரையும் வேண்டும். இவ்வாறு மேற்சொன்ன எந்த கருத்தும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.

இவ்வாறு அருள்மறை குர்ஆன் மனிதன் இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப் பட்டான் என்று சொன்ன எந்த கருத்தும் ஒன்றொடொன்று முரண்படவில்லை. மேற்படி கருத்துக்கள் எதுவும் முரண்பாடாணது (Contradiction) அல்ல. மாறாக, மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). உதாரணத்திற்கு ஒரு மனிதன் எப்போதும் உண்மையே பேசக் கூடியவன். அதேசமயம் அவன் ஒரு பொய்யன் என்றும் நான் சொல்கிறேன். மேற்படி எனது கூற்றுக்கள் முரண்பாடானது (Contradiction).

ஆனால் ஒரு மனிதன் நேர்மையானவன். அதே சமயத்தில் கருணை உள்ளம் கொண்டவன். மனிதர்களை நேசிப்பவன் என்று கூறுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது மாறுபட்ட தனிப் பண்புகள் மூலம் வேறு படுத்திக் காட்டக் கூடியதாகும். (Contradistinction). முரண்பாடில்லாத தனிப் பண்புள்ள கருத்தாகும்.

மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா

2 comments

  • mohamed sarmeen

    enakkum ithu thodarpaha santheham irunthathu so jesakkallahu hairan unkal theliwukku

  • Thelivu petravan

    Assalamu Alaikkum,ungal anaithu vilakkangalum arumai.islam kuritu “senkodi” nnum websidel thavarana purithalodu niraiya kulappangal niraintha karuthukkal undu.thayau saithu antha websidukku pathilAADI kodukkaum.ALLAH arul purivanaga.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *