Category Archives: செய்திகள்

கதீப்ஃ நகரில் ரமழான் சிறப்பு நிகழ்ச்சி (செய்தி மற்றும் புகைபடங்கள்)

05-07-2013 அன்று சவூதி அரேபியாவின் கிழக்குமாகணம் கதீப்ஃ அமைந்துள்ள நகரில் அபூபக்ர் ஸித்திக (ரழி) ஜும்ஆ பள்ளிவளாகத்தில் ரமழான் மாதத்தினை வரவேற்க்கும் முகமாக ரமழான் சிறப்பு ஒரு நாள் நிகழ்ச்சியை நடைபற்றது. இந்நிகழ்ச்சியில் மௌலவி அஜ்மல் அப்பாஸி அவர்கள் ரமழானின் சிறப்புகள் மற்றும் நோன்பின் முக்கியத்துவம் பற்றியும் மௌலவி அப்துல் அஜீஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் மௌலவி மன்சூர் மதனி அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள் அனைத்து உரைகளும் மிக பயனுள்ளதாக இருந்தது.

மவ்லவி இர்ஷாத் மதனி அவர்கள் தலையுரையாற்றினார்கள், சகோதரர் முபாராக் நானா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள் மவ்லவி பாஸில் கஃபூரி அவர்கள் அருமையாதொரு கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஒவ்வொரு உரையிலிருந்தும் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு அதற்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, தேனீர் மற்றும் ஜுஸ் வழங்கப்பட்டன

வருங்கால இளைஞர் சமுதயாத்திற்க்கு முன்னோடியாக சிறுவர்கள் பலர்அழைப்பு பணி உதவியாளர்களாக பணியாற்றியது மிகவும் சிறப்பாக இருந்து (கோடை பள்ளி விடுமுறையிலுள்ள சிறார்களை பயன்படுத்தியது மிகவும் பாராட்டக்கூடியது)

தகவல்: அபூ ஸஃஅத்

P1030898 (640x480)P1030899 (640x480)P1030911 (640x480)P1030902 (640x480)P1030901 (640x480)P1030905 (640x480)P1030899 (640x480)P1030887 (640x480)P1030891 (640x480)P1030890 (640x480)P1030889 (640x480)P1030882 (640x480)P1030875 (640x480)P1030873 (640x480)P1030943 (640x480)P1030923 (640x480)P1030917 (640x480)P1030909 (640x480)P1030908 (640x480)

‘அஸதின்’ சீற்றம்

‘அஸதின்’ சீற்றம்

பசுமையின் தெவிட்டாத வனப்பு
பளிங்கு வெளியாய் விரித்துவைத்த
பஞ்சுமெத்தை வான் மேகம் – எல்லாம்
இறை ஈந்த கொடையின் சின்னங்கள்!

தம்மாம் மாநகரில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு!

அநியாய விலை உயர்வும் பொதுமக்களின் சீற்றமும்!

மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன, சென்ற ஆட்சியின் மோசமான நிதிநிலை ஆகியவற்றை காரணம் காட்டி அத்தியாவசியத் தேவையான பால், பஸ் டிக்கெட், மின்சாரம் ஆகியவற்றின் விலைகளை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதா இரட்டிப்பாக உயர்த்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கா ஹரம் ஷரீஃப் இமாம் அவர்களின் எழுச்சிமிக்க ஜூம்ஆ பேருரை.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் ஷைக் அப்துல் ரஹ்மான அல் ஸுதைஸ் அவர்கள், தன்னுடைய வெள்ளிக்கிழமை குத்பாவில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து செயலாற்றுமாறு தலைவர்களையும், உலக இஸ்லாமிய மக்களையும் கேட்டுக்கொண்டார்கள். மோதல் போக்கு மற்றும் குழப்பங்களை விட்டுவிட்டு உண்மையான ஒற்றுமையின் பக்கம் செல்வதுதான் நம்முன்னே உள்ள சரியான வழி என்று கூறினார்கள்.

அல்-ஜுபைல் – ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை

அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் திடலில் ஹஜ்-ஜுப்பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா பேரூரை (தமிழ் மொழியில்) 6-11-2011 காலை 6:30 மணியளவில் நடைபெற்றது. அல்-ஜுபைல் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் பல்லாயிரக்கணக்கான சகோதர சகோதரரிகள் கலந்து கொண்டனர். மௌலவி ஷமீம் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தி பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினார்கள்.

தாலிபான் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு மூலம் தாலிபான் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் நேட்டோ படையைச் சேர்ந்த 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப் பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன!

அமெரிக்க வீரர்கள் பயணம் செய்த பஸ்சுக்கு அருகில் டயோட்டா சிடான் காரை வெடிக்கச் செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Powered by WordPress | Designed by: diet | Thanks to lasik, online colleges and seo