www.idhuthanislam.com

அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள் - பாராட்டும் பத்திரிக்கை!

 
 
 

அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கும் கிள்ளை என்கிற கிராமத்தில் இருக்கிறது `ஸ்ரீ மகா மாரியம்மன்' கோயில். வேப்ப மரம், சூலாயுதம், சுற்றிலும் சிறுசிறு தெய்வங்களின் சிலைகள்... என   கோயில் படுஅமர்க்களம்.



`உருவ வழிபாடு கூடாது என்பதுதான் இஸ்லாம் மதத்தின் அடிப்படை. ஆனால் முஸ்லிம் பெண்ணான நீங்கள் கோயில் கட்டி பூஜை நடத்துகிறீர்கள். ஏன்? எப்படி?'

``பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு.  ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.

கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்'ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க'' என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார்.

பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?

``எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க'' என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு.  ஏழ்மையான  குடும்பம்.  கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கிய சொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் பஷீராவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதுண்டாம். அதைப் பற்றிக் கேட்டால், `` நான் பிறப்பால் முஸ்லிம்தான். ஆனால் அம்மன் மீது எனக்குப் பற்றுண்டு.  உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை!'' என சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசும் பஷீரா, அம்மன் படத்தை தனது வலக்கையில் `பச்சை' குத்தி `அக்மார்க்' அம்மன் பக்தையாகவே மாறியிருக்கிறார். மனைவி கோயில் கட்டி வழிபாடு நடத்துவது பற்றி கணவர் ஜின்னா என்ன சொல்கிறார்? ``கோயில் கட்டியதிலிருந்து இன்றுவரை அவர் செய்கிற எந்த வேலைக்கும் நான் குறுக்கே நிற்பதில்லை'' என்கிறார்.

இந்தக் கோயில் பற்றி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ``மதநல்லிணக்கத்திற்கு இந்த அம்மன் கோயில் ஒரு உதாரணம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சொல்லப் போனால், பேரூராட்சி மூலம் கோயில் வளர்ச்சிக்கு முடிந்தவரை உதவி செய்கிறோம்!'' என்கிறார்.

``முஸ்லிம் பெண் கோயில்  கட்டி கும்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கடவுளின் அருளைப் பெறுவதில் இதுதான் வழிபாட்டு முறை என்று எதையும் வரையறுக்க முடியாது!'' `கோரஸாகச் சொல்கிறார்கள். கிள்ளையைச் சேர்ந்த முகமது உசேனும், பாஸ்கரும்.

கோயிலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கும்பாபி ஷேகத்திற்கு நாள் குறித்திருக்கிறார் பஷீரா!

(நன்றி: குமுதம்)


அன்பின் சகோதர சகோதரிகளே... இது குறித்து நாளை மறுமையில் நாம் விசாரிக்கப்படுவோம். நம் அழைப்புப்பணியின் குறிக்கோள் எதை நோக்குகின்றது?

ஏகஇறைவனின் திருப் பெயரால்

கோயில் கட்டி கும்பிடும் முஸ்லீம் குடும்பம் என்ற கட்டுரையை வாசித்தேன் இவர்களின் அறியமையை நினைத்து வேதனையாhக உள்ளது வல்ல இறைவன் எந்த செயலை மன்னிக்கமாட்டேன் என்று உறுதிபட கூறியிருக்கின்றானே அப்படிப்பட் ட நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய மாபாதகச் செயலை செய்து வருகின்றார்கள். 10 வருட காலமாய் இந்த தம்பதியினர் செய்து வரும் இந்த செயலை தடுத்து எடுத்துச் சொல்வதற்கு அந்த பகுதியில் உணர்வுள்ள ஓர் முஸ்லீம் கூட இல்லாமல்போனது வெடக்கப்படக்கூடிய விஷயம்.

தமிழகத்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டுவிட்டதாய் நாம் கணவு கண்டு கொண்டிருக்கிறோம். இல்லை என்பதுதான் உண்மை நிலை. முஹம்மது உசேன் பேன்ற எம்மதமும் சம்மதம் என்ற போலி சித்தாந்தத்தை ஆதரிக்கும் பெயர்தாங்கி முஸ்லீம்கள் மறுமையை அஞ்சிக்கொள்ளட்டும். இறைவனின் முன்னால் இவரின் இந்த வாதம் எடுபடாது அது என்னவே சிதம்பரம் பகுதியில் இப்படிப்பட்ட ஷிர்க்கான செயல்கள் அதிகம் நடைபெறுகின்றது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிதம்பரத்தை சேர்ந்த மிகப்பெரும் தொழில் அதிபர் பல லட்சங்கள் செலவு செய்து ஓர் கோவிலை கட்டிக்கொடுத்தார். இவர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டார்கள் இவர்களின் சுய அறிவால் பொருளாதாரத்தை திரட்டுவதாக. வல்ல இறைவன் நினைத்தால் ஓர் நொடிப்பொழுதில் அதை பறித்துக்கொள்ள சக்தியுள்ளவன் அதோடு நாளை மறுமையிலே அல்லாஹ் விசாரிப்பான் எப்படி சம்பாரித்தாய் எப்படி செலவழித்தாய் என இதற்கு சரியான பதில் சொல்லாமல் கால்கள் நகராது என்பது நபி மொழி அல்லாஹ்வை அஞ்சிகொள்ளட்டும் இந்த வள்ளல்கள்.மேலும் இப்படிப்பட்ட இந்த செயல்கள் அறிவுருத்தும் செய்தி இன்னும் நம் சமுதாய மக்களிடம் அறியமை எனும் இருள் சூழ்ந்துள்ளதை உணர்த்துகின்றது

Name: a.shaikmohamed
email: mdshaik59@....
Location: abudhabi
Subject: PothuvAnavai


தங்கள் இணையத்தளத்தின் மூலமாக பஸிராவின் சிலைவணக்க வழிபாடுகளை படித்தேன். முதலில் பஷிரா அவரது கணவர் பிள்ளைகள் கலிமா சொல்லிய முஸ்லிம்களா? என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். சில சமயம் ஆரஎஸ்.எஸ் போனற இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம் குடும்பம் போன்று ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களும் சிலைகளை வழிபடுகிறார்கள் என்ற மாயயை உருவாக்க தீட்டப்படி சதியாக இருக்கலாம். இது அல்லாமல் இந்த தம்பதினர் முஸ்லிம்கள் தான் என்று உறுதியா தெரியுமானால் உங்களைப்போன்றவர்கள் அல்லது ததஜ போன்றவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு இஸ்லாத்தின் முழுவிளக்கத்தையும் கொடுத்து அவர்களை உண்மையின் பக்கம் அழைப்பது சிறந்தது. இவர்கள் விளங்காமல்,இதன் எதிர்கா தீமை உணராமல் தவறுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இரண்டாவதாக மதஹபை பின்பற்றிக்கொண்டு இஸ்லாத்தையே விளங்காத பேட்டா கட்டிய அடி முட்டாள் அஜ்ரத்மார்கள் இருக்கும் வரையில் இதைவிட கேடுகெட்ட தீமைகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.இந்த பேட்டா கட்டிய முட்டாள் அஜ்ரத்மார்கள் இஸ்லாத்தை விளங்கவில்லை. அவர்களுக்கு மௌலுது ஓதி ஓதி தன் வயற்றை நிறப்பவே நேரம் உள்ளது.

உண்மையான இஸ்லாத்தைப்பற்றி தெரிந்துகொள் ஆர்வம் இல்லை. முதலில் இந்த போலிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.

Name: NH.Saleem
email: nhsaleem@...
Location: saudi-jeddah
Subject: Vimarsanam

Assalamu alaikkum.. I am very much worrying about this.It is very much contradiction to the basic of islam.since muslim should follow only one God Allah SBT(La ilaha Illallahh).we have to advice to that sister...or otherwise she can convert into Hindu and she can do that... It is really shameful to do all these activities in Fardah ....It shows that sister doesn\'t know anything about the Islam.She is actually a name sake muslim.her husband too....so it is really unpersimmible to do this in Islam...So we have to advice that Sister regarding Islam...Once again the media focusing a muslim as a Fundamentalist..In this case really its against Islam.Even a Layman in Islam Oppose this.
with warm regards and duah,
Hameethasheik

Name: hameethasheik
email: heftyhamee@...
Location: Muscat
Subject: Criticism
Message:

salam,
Having read this article, many may get shock but i never be shocked rather my heart praying for her to go in the straight path and our muslims to become well educated in islam so that they will be able to CONVEY THE TRUE MESSAGE OF ISLAM AND THE TRUE PURPOSE OF LIFE IN THIS WORLD.....
My advice is PL DONOT MAKE MAKE ANY FATWA ON HER AT ONCE BUT MEET HER AND HIS FAMILY .GIVE HER QURAN AND TELL HER ABOUT THE TRUE ALMIGHTY GOD - ALLAH\'S ATTRIBUTES , POWER AND MERCY .etc etc...may be it takes a long time .....but please keep on giving her DAWAH...util her death...and then pray ...BUT DO NOT ISSUE FATWA AS IF SHE BECAME KHAAFIR.........please.........if i am in INDIA , I WILL SURE MEET HER AND DO.

Name: ansar
email: hssnansar@...
Location: sri lanka
Subject: Suggestion
Message:

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிரானோ அவர் வெற்றியடைந்துவிட்டார். இந்த தம்பதியர் இருக்கும் இடம் மாற்றுமதத்தவர்களோடு இருப்பதால் தொழுகை பாங்கு அழைப்பு போன்றவை அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.மேலும் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. என்பது நம் இஸ்லாம் கொள்கை. இஸ்லாம் மார்க்கம் பூர்த்தியாகிவட்டது என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியும்.

இனி இறைவன் வந்து ஒவ்வொருவர் கனவில் வந்து எனக்கு இதை செய் அதை செய் என்று சொல்லும் அவசியம் இல்லை. எதை எல்லாம் செய்யணுமோ இன்னும் எவற்றை எல்லாம். செய்யக்கூடாதோ! அவை அனைத்தும் நம் தூதர் ரசூல் ( ஸல்) அவர்கள் மூலம் விளக்கியாகிவிட்டது. மேலும் இவர்களை மிரட்டலும் வஞ்சிப்பதும் நம் முஸ்லீம் சகோதரர்கள் தவிர்துக்கொள்ளவும். இத்தம்பதியர் நிராகரிப்பவர்கலாகிவிட்டனர். உசேன் உட்பட.மேலும் எங்கு இருந்தால் எது ஒட்டிக்கொள்ளும் என்பதை நம் முஸ்லீம் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாய் இந்த தம்பதியர் ஓர் எடுத்துக்காட்டு அவர்களின் கனவில் வந்தது எல்லாம் வெறும் கர்ப்பனையே! கல் என்றைக்கும் பரிணாமம் ஆகாது என்பது உண்மை நம் தூயமார்க்கத்தில் படித்த கிறிஸ்துவ மத குருமார்களும், மேதைகளும், உலகளவில் பேர்பெற்ற விஞ்ஞானிகளும் இனைகின்றனர்கள். யாருக்கும் யாரும் பொறுப்பாளி கிடையாது.

எவர் பிறமத கலாசாரத்திர்க்கொப்ப நடக்கின்றாரோ அவரும் அவர்களை சார்ந்தவரே! என்பது நபி மொழி இந்த மாதிரியான வழி கேடுவிலிருந்து நம் மக்களை அல்லாஹ் காப்பானாக. ஆமீன்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.

Name: abdul azeez
email: azeez1729@...
Location: habshan
Subject: Criticism
Message:

this lady is not a muslim, name only like that (never mind it) when she is built a temple she is converted to hindu...totally crazy.\"Allah\" is not give appology to her.

Name: mohamed vazeem
email: mdvazeem@...
Location: kuwait
Subject: Suggestion
Message:

Stupid thing,this is the action of \'saithaan\'. Allah only wants to save basheera..

Name: samsul hutha
email: hutha.safi@...
Location: tiruchengode
Subject: Criticism
Message:

இஸ்லாத்தின் அடிப்படை தெரியாததின் விளைவு தான் இது!

\"அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்\" என்று (நபியே!) நீர் கூறும்.

அல்குர்-ஆன் 6:164

Name: Jahangir
email: jahaonline@...
Location:
Subject: PothuvAnavai
Message:

மறுமைக்கு பயந்து நடப்பவர்களாக.. இருந்தால் அவர்கள் அதனை செய்து இருக்க மாட்டார்கள்.. நன்மையினை செய்து தீமையினை தடுக்கும் சமுதாயம் நம் சமுதாயம்.. இதுபோல் நம் சமுதாயத்திற்கு ஏதிராக தீமை நடக்கும் போது நம் அதனை துணிந்து தட்டி கேட்க வேண்டும்..

ஆதிக்கச்சக்திகள் இஸ்லாத்திற்கெதிராக எப்படியெல்லாம் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் செய்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவும் (கோயில் கட்டுவது) ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். குமுதம் போன்ற பல பார்ப்பன சக்திகள் இஸ்லாமிய சமுதாயம் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்பதினை கழுகு கண் கொண்டு பார்த்துக்கொண்டு வருகிறது. அத்தகைய சக்திகளுக்கு இந்த தம்பதியினர் ஒத்துழைப்பு கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதினை நம் அவர்களுக்கு ஏத்தி வைப்போம்.. இன்ஷா அல்லாஹ்..

Name: முத்துப்பேட்டை அபூஆஃப்ரின்
email: najiraf@yahoo.com
Location: Fujairah
Subject: PothuvAnavai
Message:

மடமையின் உச்சத்திலிருக்கும் இந்த குடும்பம் முஸ்லிம் என்று பெயர் தாங்கிகளாய் தங்களை உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டு கோயில்கட்டிக்கும்பிடும் இந்தக்குடும்பத்திற்கு அவர்கள் விரைவில் நேர்வழியடைய அல்லாஹ் அருள்புரிய பிரார்த்திக்கிறேன். அவர்கள் இந்த நிலைக்கு வந்ததற்கு நம் சமுதாயமும் ஒரு காரணம். ஏனெனில் உண்மையான - எளிமையான இஸ்லாமிய மார்க்கத்தை நம் சமுதாயம் அவர்களுக்கு எடுத்துரைக்காததுதான்.

அதற்கு முதலில் நாம் இஸ்லாமியர்களாக வாழ வேண்டும். பிறகு அதை நம்மைச்சுற்றியுள்ள நம் சமுதாயத்திற்கும் எத்திவைக்க வேண்டும். அப்போதுதான் நம்மைச்சுற்றியுள்ள நம் சமுதாயமும் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவும் இஸ்லாத்தை பின்பற்றவும், இஸ்லாமியர்களாக வாழவும் இஸ்லாமிய உலகை உருவாக்கவும் முடியும்.

Name: Abdul Hameed
email: natpudan.naesan@....
Location: Abu Dhabi
Subject: PothuvAnavai
 

This is a matter very similar to “Durga Prayers” what could we do? If possible we have to take classes about Islam trough out the village who else want to hold the right path they will become winners who else not they become enemy of God, so God is merciful.

Name: T. Sulthan
email: j_poodu@...
Location: Kuwait
Subject: General
 

enna koduma sir ithu?

Name: Saleem 
email: tosaleem@...
Location: kumbakonam
Subject: Suggestion

 

thayavai ithai muttru muluthaka vilakka vaendiya visayam.islam entra paer maaththiram thaan intha pennukku matrum islaththil entha pangumillai...kanavellam..ippadiyum kanu kaanum paenkal innum eppadiyappatta kanavu kannndalum niraivaetruvarkal...ariyamiyen aha perum ucuchaththil ival.....paavam.

Name: nijham abdul cader
email: abdulnila@...
Location:
Subject: Suggestion

கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் குடும்பம் - என்ற கட்டுரையையும் அதை தொடர்ந்த வாசகர் கருத்துக்களையும் படித்தேன் வருந்தினேன். காரணம் ஏகத்துவ எழுச்சியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது அப்படிப் பட்ட மண்ணில் இது போன்ற சம்பவங்களை கேள்விப் படும்போது வேதனைதான் மிச்சம்.

சகோ.சலீம் சொல்வது போல அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் தாஃவா செய்து திருத்த முயற்சிக்க வேன்டும். எப்போது அவர்கள் ஏகத்துவத்தை விட்டு வெளியேறினார்களோ அப்போதே முஸ்லிம் என்ற தகுதியை இழந்து விட்டார்கள் என்பது எனது கருத்து. அல்லாஹ் ஆஃலம். இந்நிலையில் இலங்கை சகோ.அன்ஸார் அவர்களின் கருத்து தேவையற்றதாகி விடுகிறது காரணம் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இணை வைப்பவர்களுக்குத்தான் ஃபத்வா கொடுக்க முடியும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு ஃபத்வா கொடுக்க நமக்கு அதிகாரமில்லை.

இப்போது நாம் வழி தவறிய அவர்களை மீன்டும் சன்மார்க்கத்தின் பக்கம் அழைத்து வர ஊரிலுள்ளவர்கள் நேரடியாக முயறசி செய்ய வேன்டும் - என் போன்ற வெளிநாடு வாழ் சகோதரர்கள் வழி தவறிய அவர்களை சரியான வழியில் மீட்டெடுக்க வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம் ஆமீண்.

Name: Mohamed Iqbal
email: mimhouse@.....
Location: Sharjah - U.A.E
Subject: Vimarsanam

ASTHAH FIRULLAH,Faseera not a muslim,if she muslim she will worship only allah.now she making opposite of islamic opinion,monathism& etc so,she is not a muslim.ALLAH is not accept it,i kindly request to her area muslims,please advice to faseera & her family,about ISLAM& MUSLIMS

Name: Buhary Nasrudeen
email: www.nasru@...
Location: Srilanka
Subject: Criticism

அந்த பெண்னை மட்டும் குற்றம் சொல்லி நம் பொருப்புகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. தவ்ஹீதை எடுத்துச் சொல்வது என்பது கூட்டுப் பொறுப்பு அதை சரிவர நிறைவேற்றாத காலமெல்லாம் இது போன்ற சம்மவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டு.

அகமது கபீர்
தம்மாம் – சவூதி அரேபியா.

Name: Ahmed Kabeer
email: ahmedkabeer@....
Location: Dammam
Subject: AlOsanai

 
முதலில் இலங்கையைச் சேர்ந்த அன்சார் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்த பஷீராவைப்பற்றி பத்வாக்களைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிற இவர் இந்த சிலை வணக்கத்தைச் செய்யக்கூடியவர் காபிர் இல்லையென்று சொல்லி அதற்கப்புறம் கபுறு வணக்கத்தை சரிகாண முன்வருகிறார் என்று நினைக்கிறேன். இலட்சோப இலட்சம் இணை வைப்பாளர்களும் கபுறு வணங்கிகளும் அரபுப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொண்டு இஸ்லாம் வளரத் தேவையில்லை. அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். தேவையுள்ளவன் மனிதன்தான். அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனுக்கு இணை வைத்தவன் அப்துல்லாஹ் என்று பெயர் வைத்திருந்தாலும் அவன் இஸ்லாத்திற்குள் உள்ளவன் அல்ல.
யாரும் அலட்டிக் கொள்ள வெண்டியதில்லை. தவ்ஹீதைச் சொல்லத்தான் நமக்கு முடியும். நல்வழிப்படுத்தும் வேலை அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளது. இப்படிப்பட்ட அநாச்சாரங்களிலிருந்து நம்மையும் அல்லாஹ்வை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
வஸ்ஸலாம்
அபூபௌஸீமா


Name: Abufawzeema
email: abufawzeema@....
Location: Sri Lanka

 

there is no word to express my feeling. i want to know how we call baseera as a muslim. baseera by name sake only muslim not by intensely she is 100% kafir pls change your name and dress and do whatever u like saitan.

Name: mrs hameed
email: shah@....
Location: dammam
Subject: Criticism
 

 

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை